குளவி கொட்டி சிறுவன் சாவு

பாப்பிரெட்டிப்பட்டி: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன், 35, கூலித்தொழிலாளி. இவர் தன் குடும்பத்துடன், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொ.துறிஞ்சிப்பட்டி, செம்பியானுாரிலுள்ள தனியார் தோட்டத்தில் கடந்த, 2 ஆண்டுகளாக தங்கி, கூலி வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மதியம், 12:30 மணியளவில் பாலச்சந்திரன் மனைவி நந்தினி அங்குள்ள விவசாய கிணற்றின் அருகில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அங்கு, அவரது மகன் துருவன், 6, விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த குளவி கூட்டிலிருந்து, 10க்கும் மேற்பட்ட குளவிகள், சிறுவன் துருவனை கொட்டின. வலியால் துடித்த சிறுவனை, கே.என்.புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் துருவன், நேற்று உயிரிழந்தான். பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement