வீரன் பாப்பாத்தி அம்மன் திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகிலுள்ள வேட்டியம்பட்டி கிராமத்தில், 7 ஆண்டுகளுக்கு பிறகு, வீரன் பாப்பாத்தி அம்மன் கோவில் திருவிழா நேற்று துவங்கியது.

இதில், வேட்டியம்பட்டி, கிட்டம்பட்டி, பாப்பாரப்பட்டி, அவதானப்பட்டி, பெரிய மோட்டூர், சின்ன மோட்டூர், பழைய பேட்டை உள்ளிட்ட, 14 கிராமங்களில் இருந்து, வன்னி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவில் முன், பூஜை செய்து வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement