இந்தியாவுக்கு 13 தங்கம்: தெற்காசிய யூத் டேபிள் டென்னிசில்

காத்மாண்டு: தெற்காசிய யூத் டேபிள் டென்னிசில் இந்தியாவுக்கு 13 தங்கம் உட்பட 16 பதக்கம் வென்றது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில், தெற்காசிய யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான பைனலில் இந்தியா, நேபாளம் மோதின. பிரிதா, அனன்யா, ஹர்தீ படேல், தியா இடம் பெற்ற இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.
பின், 15 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான பைனலில் பிரீத்தி பால், ஆருஷி நந்தி, ஆத்விகா அராவல், தன்மயி சஹா இடம் பெற்ற இந்திய அணி 3-0 என இலங்கையை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது.
அடுத்து நடந்த 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தனிநபர் பைனலில் இந்தியாவின் குஷால் சோப்தா 3-1 என சகவீரர் பாலமுருகனை வென்றார். 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தனிநபர் பைனலில் இந்தியாவின் அனன்யா 3-1 என பிரிதாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
இரட்டையரில் (15, 19 வயது) ஆதிக்கம் செலுத்திய இந்திய நட்சத்திரங்கள் 6 தங்கத்தையும் தட்டிச் சென்றனர்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 13 தங்கம், 3 வெள்ளி என, மொத்தம் 16 பதக்கம் கிடைத்தது.
மேலும்
-
மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி
-
மின்சார ரயில் வருகையை காட்டும் டிஜிட்டல் பலகை
-
27 பேட்டரிகளுடன் 'பலே' திருடன் கைது
-
மத்திய குற்றப்பிரிவு வாயிலாக 15 மாதங்களில் 747 பேர் கைது
-
மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு ஆர்.டி.ஐ., வாயிலாக விபரம்
-
அதிகாரிகள் சுருட்டி வைத்த விதிமீறல் பேனர்கள் அகற்றம்