ஆசிய பேஸ்பால்: இந்தியா தகுதி

பாங்காக்: ஆசிய கோப்பை பேஸ்பால் தொடருக்கு இந்திய பெண்கள் அணி தகுதி பெற்றது.

நடப்பு ஆண்டில் பெண்களுக்கான ஆசிய கோப்பை பேஸ்பால் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, இலங்கை, ஈரான் அணிகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

அடுத்து நடந்த 'சூப்பர் ரவுண்டு' சுற்றில் இந்தோனேஷியாவிடம் வீழ்ந்த இந்தியா, தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முடிவில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தோனேஷியா, இந்தியா அணிகள் பைனலுக்கு (ஏப். 29) முன்னேறின.

தவிர இவ்விரு அணிகள், ஆசிய கோப்பை பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றன. இந்திய அணி, தொடர்ந்து 4வது முறையாக (2017, 2019, 2023, 2025) ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது.

Advertisement