செஸ்: அரவிந்த் அபாரம்

வார்சா: கிராண்ட் செஸ் தொடரில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் இரண்டாவது இடம் பிடித்தார்.
போலந்தில் கிராண்ட் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' செஸ் நடக்கிறது. நேற்று நடந்த ஏழாவது சுற்றில் தமிழகத்தின் மதுரையை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், போலந்தில் ஜான் டுடா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய அரவிந்த், 36 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 8 வது சுற்றில் அரவிந்த், பிரான்சின் மேக்சிம் வாசியரிடம் தோற்றார். 9வது, கடைசி சுற்றில் அரவிந்த், பிரான்சின் அலிரேசாவை வீழ்த்தினார்.
தமிழகத்தின் பிரக்ஞானந்தா, 7வது சுற்றில் சுலோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவை சந்தித்தார். இப்போட்டி 40 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. 8வது சுற்றில் பிரக்ஞானந்தா, ருமேனியாவின் டேவிட்டை வீழ்த்தினார். தொடர்ந்து அசத்திய இவர், கடைசி, 9வது சுற்றில் பிரக்ஞானந்தா, போலந்தின் ஜான் டுடாவை வென்றார்.
கடைசியில் விளாடிமிர் பெடோசீவ் (11.0), அரவிந்த் (11.0), முதல் இரு இடம் பிடித்தனர். பிரக்ஞானந்தா (10.0) 4வது இடம் கிடைத்தது.

Advertisement