கோவில் கட்டுமானத்தை அனுமதிக்க வேண்டும் கலெக்டர் ஆபீசில் கவுந்தப்பாடி மக்கள் மனு
ஈரோடு:கவுந்தப்பாடியை சேர்ந்த சரவணன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: கவுந்தப்பாடி சந்தைப்பேட்டையில் ஐயப்ப பக்தர்கள், மக்கள் சார்பில் ஆறு மாதங்களுக்கு முன், ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் அமைக்க திருப்பணி துவங்கினர். அப்பகுதி ம.தி.மு.க., ஒன்றிய செயலர் வீரகுமார், கோவில் கட்ட தடை விதிக்குமாறு, கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பி கட்டுமானத்தை நிறுத்தினார். நாத்திகவாதிகள் சிலரும், சில அமைப்புகளும் சேர்ந்து இப்பணி நடக்கவிடாமல் தடுக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் விசாரித்து, கட்டுமான பணி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் கட்டுமிடம் போக்குவரத்து பாதிப்பு, தனி நபர்களுக்கு இடையூறு இல்லாத இடமாகும். எனவே தடையை நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதே பிரச்னை தொடர்பாக, ஈரோடு மேற்கு மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சிவசக்தி தலைமையில் மற்றொரு மனு வழங்கினர். அதில், 'கவுந்தப்பாடியில் சாலை ஓரம், ஓடை பள்ளத்தில் வீரகுமார் என்பவர், ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி செய்து வருகிறார். இவ்விடம் நீர் நிலை புறம்போக்கு, நீர் வழிப்பாதையாக உள்ளது. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் விசாரித்து, நில அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்விடத்தில் வீடு கட்டப்பட்டால், நீர் வழிப்பாதை தடைபடும்' என்று தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மின் துண்டிப்பால் தாய்மார்கள் தவிப்பு
-
நுாற்றாண்டு விழாவை கொண்டாடிய பள்ளி
-
ராமநாதபுரத்தில் ஆறாக ஓடுகிறது பாதாளசாக்கடை கவுன்சிலர்கள் குமுறல்
-
மீன் பிடி தடைக்காலத்தில் தடையை மீறி செயல்படும் படகுகள் மீது நடவடிக்கை
-
தடைக்கால நிவாரணத்தொகை 39,787 பேருக்கு பரிந்துரை
-
ரேஷன் கடைகளில் கோதுமை கிடைக்கவில்லை