இரண்டாவது வெற்றி பெறுமா இந்தியா * தென் ஆப்ரிக்காவுடன் பலப்பரீட்சை

கொழும்பு: முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று இந்தியா, தென் ஆப்ரிக்க பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இலங்கையில், பெண்களுக்கான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது.
இன்று இந்திய அணி, தனது இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்காவை சந்திக்க உள்ளது. கடைசியாக இரு அணிகள் மோதிய ஒருநாள் தொடரில் இந்தியா 3-0 என தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியுள்ளது.
தற்போது, சர்வதேச அரங்கில் தொடர்ந்து 7 போட்டியில் வென்ற இந்தியாவுக்கு ஸ்மிருதி மந்தனா, முதல் போட்டியில் ஆட்டநாயகி ஆன பிரதிகா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கில் உதவ காத்திருக்கின்றனர். பவுலிங்கில் ஸ்னே ராணா, தீப்தி சர்மா, ஸ்ரீ சரணி கூட்டணி மறுபடியும் அசத்தினால், தொடரில் இந்தியா இரண்டாவது வெற்றி பெறலாம்.
தென் ஆப்ரிக்க அணி புதிய பயிற்சியாளர் மஷிம்யி தலைமையில் களமிறங்குகிறது. முன்னணி ஆல் ரவுண்டர் மரிஜானே காப் ஓய்வில் இருப்பது அணிக்கு சிக்கல் தரலாம். இருப்பினும் கேப்டன் லாரா, சுலே லஸ், நாடின் டி கிளர்க் உள்ளிட்டோர் பலம் சேர்ப்பது, இந்தியாவுக்கு நெருக்கடியாக இருக்கும்.
மேலும்
-
தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
-
உள்ளூர் வர்த்தக செய்திகள்
-
கோவில் கட்டுமானத்தை அனுமதிக்க வேண்டும் கலெக்டர் ஆபீசில் கவுந்தப்பாடி மக்கள் மனு
-
பந்தல்கரடு அடிவாரத்தில் எரிந்து கிடந்த மொபட்
-
ஈரோட்டில் சிக்னலில் பசுமை பந்தல் அமைப்பு
-
மே 4க்குள் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் அரசியல் கட்சியினர், அமைப்பினருக்கு நோட்டீஸ்