புகார் பெட்டி செய்தி நெற்களத்தில் நிறுத்தப்படும் டிராக்டர்களை அகற்ற வேண்டும்

உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இங்குள்ள ஊராட்சி சேவை மையம் அருகே, 20 ஆண்டுக்கு முன் நெற்களம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, நெற்களம் முறையாக பராமரிப்பு இல்லாமல், களத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர்கள் சேதமடைந்து உள்ளன.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நெற்களத்தில் டிராக்டர்களை நிறுத்தி வருகின்றனர். இதனால், நெற்களத்தில் போதிய இடவசதி இல்லாமல், விளைப்பொருட்களை உலர்த்த முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, நெற்களத்தில் நிறுத்தப்பட்டுள்ள டிராக்டர்களை அகற்ற, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- எம். சுவர்ணராஜ்,

மலையாங்குளம்.

Advertisement