இலவச வீடு வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்

தேனி: தேனி அல்லிநகரம் அருகே உள்ள பொட்டல்களத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தலித் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

அந்த இடத்தில் தற்போது அரசு வீடுகள் கட்டி உள்ளது.

தற்போது கட்டப்பட்டுள்ள வீட்டிற்கான சாவிகளை இலவசமாக வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் தேனி தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, மாவட்ட செயலாளர் ராமசந்திரன், நிர்வாகிகள் வெங்கடேசன், முத்துக்குமார், தர்மர், கண்ணன், ஜெயபாண்டி உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலையில் தாசில்தார் சதீஸ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் கட்சியினர் கலைந்து சென்றனர்.

Advertisement