பாகிஸ்தானை சேர்ந்தவர் சென்னையில் உயிரிழப்பு

சென்னை, சென்னையில் மருத்துவ சிகிச்சையில் இருந்த, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.

அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவனை ஒன்றில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் தாய் உதவியாக இருந்தார்.

சிகிச்சை பலனின்றி, அந்த நபர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, இறந்தவரின் சடலத்துடன், அவரது தாயையும் போலீசார் விமானம் வாயிலாக, பாகிஸ்தானுக்கு அனுப்பினர்.

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் படுகொலை சம்பவத்திற்குபின், இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் வெளி யேற்றப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Advertisement