குழாயில் உடைப்பு ஏற்பட்டு 6 மாதமாக குடிநீர் வீண்

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள செந்தில்நகர் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சாலை வசதியின்றி மக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.

மண் சாலையால், வாகனங்கள் செல்வதே சிரமமாக உள்ளது. சாலையின் நடுவே காவிரி குடிநீர் குழாய் உடைந்து வீணாகி ஓடுகிறது. மக்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

குழாய் உடைப்பு குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மக்கள் புலம்புகின்றனர்.

Advertisement