மே 4 வேம்பத்துார் கலிதீர்த்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

மானாமதுரை: திருப்பாச்சேத்தி அருகேயுள்ள வேம்பத்துாரில்பூர்ண புஷ்கலா தேவி கலிதீர்த்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் மே 4ம் தேதி காலை 7:30 முதல் 8:30 மணிக்குள் நடக்கிறது.

இதற்கான யாகசாலை பூஜை மே 3 காலை 8:00 மணிக்கு ஆரம்பமாகிறது. அன்று மாலை 5:00 மணிக்கு காப்பு கட்டுதல், வேதிகா பூஜை, சதுர்வேதி பாராயணம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

மே 4 அதிகாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கி, ஹோமங்கள், பாராயணத்தை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை, மந்த்ர புஷ்பம், சதுர்வேத பாராயணம் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 98941 42409ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement