அடுத்தவர் நிலத்தில் அத்துமீறி நுழைந்த தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

தேவதானப்பட்டி: சில்வார்பட்டியில் அடுத்தவர் இடத்தில் அத்துமீறி நுழைந்து தகரஷெட் அமைக்க முயன்ற தி.மு.க., வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பரமசிவம் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி வடக்குதெருவைச் சேர்ந்தவர் முருகன் 53. பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இதே ஊரில் ரைஸ்மில் அருகே 20 சென்ட் இடத்திற்கு, அத்துமால் சர்வே செய்வதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்றார். பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் சர்வே செய்யும் பணி நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சில்வார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த தி.மு.க., வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பரமசிவம் 44. இவரது அண்ணன் தெய்வம், பரமசிவம் மனைவி இந்திரா, உறவினர்கள் செல்லம்மாள், நண்பர் முருகன் ஆகியோர், சம்பந்தப்பட்ட முருகன் இடத்தில் அத்துமீறி நுழைந்து, மண் அள்ளும் வாகனத்தில் சுத்தம் செய்து தகரஷெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து கேட்ட முருகனை, பரமசிவம் மிரட்டியுள்ளார். இவரது புகாரில் பரமசிவம், தெய்வம் உட்பட ஐந்து பேர் மீது தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல்மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Advertisement