இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் விபத்தில் காயம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள் விபத்தில் காயமடைந்தார்.

போடி வஞ்சிஓடை தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் 47. இந்திய கம்யூ., தேனி மாவட்ட செயலாளர். தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு, திண்டுக்கல் தேனி பைபாஸ் ரோட்டில் காரை ஓட்டி சென்றார். தாமரைக்குளம் பிரிவு பெட்ரோல் பங்க் அருகே எதிரே வந்த கார் பெருமாள் வந்த கார் மீது மோதியது.

இதில் காயமடைந்த பெருமாள், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்திய காஞ்சிபுரம் அருகே வீராபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஸ்ரீதரிடம் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement