போலீசை தாக்கிய பெயின்டர் கைது
போலீசை தாக்கிய பெயின்டர் கைது
எம்.ஜி.ஆர்., நகர்: எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலைய போலீஸ்காரர் முத்து, 36. கடந்த 26ம் தேதி நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நெசப்பாக்கம் காமராஜர் சாலையில், இருவர் சண்டையிடுவதாக தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு சென்று முத்து எச்சரித்து வீடியோ எடுக்க முயன்றார். அப்போது அதில் ஒருவர், போலீஸ்காரர் முத்துவிடம் ஒருமையில் பேசி தாக்கினார்.
இதில் காயமடைந்த முத்து, கே.கே.நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். முத்துவை தாக்கியது, நெசப்பாக்கம், பாரதி நகரைச் சேர்ந்த பெயின்டர் ஜனார்த்தனன், 25, என தெரியவந்தது. அவரை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement