மகள் மாயம்: தந்தை புகார்..
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் சிவசங்கரன் மகள், ஜெயஸ்ரீ, 21, இவர், கல்லுாரியில் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த 26ம் தேதி, வெளியில் சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். மாலை வரை வீட்டுக்கு வரததால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அவரை உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement