தீ வைப்பு சம்பவம் மர்ம நபர்களுக்கு வலை

அரியாங்குப்பம்: ஏரிக்கரையில் புட்புதர்கள் தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த, அபிேஷகப்பாக்கத்தில் இருந்து கரிக்கலாம்பாக்கம் செல்லும் வழியில், ஏரிக்கரை உள்ளது. அந்த பகுதியில், மரங்கள், அடந்த முட்புதர்கள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில், புட்புதர்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது. கோடை காலம் என்பதால், தீ மளமளவென அந்த பகுதியில் உள்ள புட்புதர்களில் பரவி தீ கொழுந்து விட்டு எரிந்தது.

தகவல் அறிந்த புதுச்சேரி தீயணைப்பு படையினர் வந்து, எரிந்து கொண்டிருந்த புட்புதர்களை தண்ணீர் ஊற்றி அனைத்தனர். தீ பற்றி எரிந்த அந்த பகுதியில் அடந்த மரப்பகுதியில், இருந்த மயில்கள், பறவைகள் வேறு ஒரு இடத்திற்கு தப்பிச்சென்றன. புட்புதரில் தீ வைத்த நபர்களை தவளக்குப்பம் போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisement