நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்காத 'மர்மம்' என்ன? உடுமலை ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம்

உடுமலை: உடுமலை நகராட்சியுடன், கணக்கம்பாளையம் ஊராட்சியை இணைக்க வலியுறுத்தி, ஒருங்கிணைப்பு குழு சார்பில் போராட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியின் மூன்று எல்லையாகவும், உடுமலை நகராட்சி, கோட்டாட்சியர் அலுவலகம்,தாலுகா அலுவலகம், கோர்ட் வளாகம், அரசு மருத்துவமனை, போக்குவரத்துத்துறை, அரசுக்கல்லுாரி, ஐ.டி.ஐ., என அனைத்து அரசு அலுவலகங்களும் கணக்கம்பாளையம் வருவாய் கிராமத்தில் அமைந்துள்ளன.
நகருக்கு அருகில், நகரப்பகுதி விரிவாக்கமாக அமைந்துள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியை, உடுமலை நகராட்சியுடன் இணைக்க வேண்டும், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம், நகராட்சியுடன் இணைக்க வேண்டிய ஊராட்சிகள் குறித்து, கருத்துரு தயாரித்து அனுப்பியதோடு, உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானமும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த டிச., மாதம், ஊராட்சிகளை இணைக்கும் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இதில், கணக்கம்பாளையம் ஊராட்சி விடுபட்டிருந்தது.
இதனால், அதிருப்தியடைந்த பல்வேறு அரசியல் கட்சியினர், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், மனு அளிப்பது, கிராம சபையில் தீர்மானம், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில், உடுமலை நகராட்சியுடன் கணக்கம்பாளையத்தை இணைக்க வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நகராட்சி அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகம் முன், போராட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாப்புச்சாமி, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில் பேசியவர்கள், 'நகராட்சியின் மூன்று எல்லையாகவும், அரசு அலுவலகங்கள் அனைத்தும் அமைந்துள்ள வருவாய் கிராமத்தை, நகராட்சியாக விரிவாக்கம் அடைந்த கணக்கம்பாளையம் ஊராட்சியை இணைக்காததின் மர்மம் என்ன; இது குறித்து மாவட்ட நிர்வாகமும், அரசும் விளக்கம் அளிக்க வேண்டும்,' என்றனர்.
மேலும்
-
தி.மு.க.,வினருக்கும் அதே கதி; கொலை வழக்கில் போராட்டம்
-
காவல் துறை காலி பணியிடம்; விபரங்களை மறைத்த அரசு
-
வங்கதேசத்தை சேர்ந்த 33 பேர் கைது; சென்னையில் டில்லி போலீஸ் அதிரடி
-
போக்சோ வழக்குகள் கடந்த ஆண்டு அதிகரிப்பு
-
'ஹாட் ஸ்பாட், பிளாக் ஸ்பாட்' விபத்து பகுதி ரூ.870 கோடியில் சீரமைப்பு
-
அமைதி பூங்காவா தமிழகம்? முதல்வர், அமைச்சர்களுடன் வானதி வாக்குவாதம்