போக்சோ வழக்குகள் கடந்த ஆண்டு அதிகரிப்பு

சென்னை:: தமிழகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2023ம் ஆண்டை விட, 2024ல் போக்சோ வழக்குகள் 2,388 அதிகரித்துள்ளன.
தமிழகத்தில், பாலியல் பலாத்காரம், பாலியல் பலாத்கார முயற்சி, மானபங்கம், பாலியல் துன்புறுத்தல், பெண்கள் கடத்தல், கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கொடுமைக்கு ஆளாகுதல், வரதட்சணை மரணம் போன்றவற்றை, பெண்களுக்கு எதிரான குற்றங்களாக காவல் துறையினர் வகைப்படுத்தி உள்ளனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு, பெண்களுக்கு எதிராக, 3,233 குற்றங்கள் நடந்துள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு, 3,084; 2022ல், 2,926 குற்றங்கள் பதிவாகி உள்ளன. கடந்த 2023ஐ விட, 2024ல் 149 குற்ற சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு, போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு 6,969 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதற்கு முந்தைய ஆண்டு 4,581; கடந்த 2022ல், 4,968 வழக்குகள் பதிவாகி உள்ளன. 2023ஐ விட, 2024ல் போக்சோ வழக்குகள் 2,388 அதிகரித்துள்ளன. இவ்விபரம் சட்டசபையில், அரசு நேற்று தாக்கல் செய்த காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்
-
தாயை கொன்ற வழக்கில் வாலிபர் தஷ்வந்த் விடுதலை
-
ரீல்ஸ் மோகத்தில் சேட்டை; கோவிலில் வீடியோ எடுத்தவர்கள் மீது போலீசில் புகார்!
-
பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
-
லாரி டிரைவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறமை வேண்டும்: அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு
-
பஹல்காம் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு
-
சிகிச்சையில் சிறுத்தை மரணம்: வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை