அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு சார்பில் வாட்ஸ்ஆப் மூலம் இணையும் நிகழ்ச்சி

விழுப்புரம்: விழுப்புரம் மண்டல அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வாட்ஸ் ஆப் சேனல் லிங்க் இணைப்பு மூலம் கட்சியில் இணையும் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ் பாபு, ராஜா, முகுந்தன், ராமதாஸ் முன்னிலை வகித்தனர். இதில், நிர்வாகிகள் வாடஸ் ஆப் ஸ்கேனர் மூலம் தங்களை இணைத்து கொண்டனர். அப்போது, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ், நிர்வாகிகள் எழிலரசன், காமேஷ், பிரபாகரன், விக்னேஷ்வரன், விஜி, தனுஷ் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement