கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே விவசாய கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி தாலுகா மேல்காரணை கன்னியப்பன் மகன் தன்ராஜ், 22; இவர் நேற்று பகல் 12:00 மணிக்கு, அதே பகுதியிலுள்ள ராமகிருஷ்ணன் என்பவரது விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். கிணற்றில் குதித்தவர் மேலே வரவில்லை.
அவருடன் குளித்த நண்பர்கள் அளித்த தகவலின்பேரில் கஞ்சனுார் போலீசார் மற்றும் அன்னியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் தேடி தன்ராஜ் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தன்ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கஞ்சனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement