பொக்லைன் உரிமையாளர்கள் ஸ்டிரைக்

திருச்சி: துறையூரில் மணல் லாரி, டிப்பர் லாரி, பொக்லைன் உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மணல் லாரி, டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் உரிமையாளர்கள், கட்டுமான பொருள்களின் விலைவாசி உயர்வை திரும்ப பெற வேண்டும்.

லாரி, பொக்லைன் வாடகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதில், லாரி ஓட்டுநர்கள் மற்றும் பொக்லைன் ஆப்பரேட்டர்களும் கலந்து கொண்டு, கோஷங்கள் எழுப்பினர். வேலை நிறுத்தம் காரணமாக, துறையூரில் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Advertisement