அறங்காவலர் குழு தலைவர் இல்ல மணி விழா

திருவெண்ணெய்நல்லூர்: கிருபாபுரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மணி விழா நடந்தது.

திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை திருமண மண்டபத்தில், கிருபாபுரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜாராம், கீரிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கவுரி தம்பதிக்கு மணி விழா நடந்தது.

தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், தி.மு.க., நகர செயலாளர் கணேசன், துணைச் சேர்மன் ஜோதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அருணா தொல்காப்பியன், ஒன்றிய சேர்மேன் ஓம் சிவசக்திவேல், அரகண்டநல்லூர் அ.தி.மு.க., நகர செயலாளர் ராஜ்குமார், தி.மு.க., நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, கவுன்சிலர்கள் பாக்கியராஜ், பாபு, செந்தில்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

Advertisement