விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

விருதுநகர்: விருதுநகரில் ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது, தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட ஒன்றிய தலைவர் அப்பாஸ், மாவட்டச் செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் பீமராஜா, ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் பேசினர்.

Advertisement