நுாற்றாண்டு விழாவை கொண்டாடிய பள்ளி

திருவாடானை: தமிழகத்தில் 100 ஆண்டுகளை கடந்துள்ள பள்ளிகளை திருவிழாவாக கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவாடானை அரசு தொடக்கப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்துள்ளது. நேற்று திருவாடானை அரசு தொடக்கப்பள்ளியில் இதற்கான விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் கதிரவன் தலைமை வகித்தார். இப்பள்ளியில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்ற ஜேசுதாஸ், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற உதயகுமார் மற்றும் பல ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். அரசு வக்கீல் கார்த்திகேயன், ரோட்டர் சங்க தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு பள்ளி வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.

Advertisement