தகவல் மையம் திறப்பு விழா
மதுரை: வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் செல்லம்பட்டியில் தெற்காறு உபவடிநில திட்டத்தின் கீழ் விக்கிரமங்கலம், மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்ட அரங்கில் ஒற்றை சாளர தகவல் மையம் துவக்கப்பட்டது.
துறையின் துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி துவக்கி வைத்தார்.
அவர் கூறியதாவது: வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, நீர்வளத்துறை, வேளாண் பொறியியல் துறையுடன் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இணைந்து மாதிரி கிராமத்தை உருவாக்கியுள்ளோம்.
இந்த மையத்தில் 8 துறை அலுவலர்களின் அலைபேசி எண்கள் குறிப்பிட்டுள்ளோம். இங்குள்ள பதிவேட்டில் விவசாயிகளின் குறைகள், தேவைகளை பதிவு செய்யலாம் அல்லது அலுவலர்கள் வரும் போது தெரிவித்தால் பிரச்னைகள் சரிசெய்யப்படும்.
இருக்கும் நீராதாரங்களை பயன்படுத்தி தண்ணீர் பட்ஜெட் தயாரிக்கும் விதம், பயிரிடும் முறை உட்பட அனைத்து தகவல்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்குகிறோம் என்றார். உதவி வேளாண் அலுவலர்கள் மீனா, சர்மிளா கலந்து கொண்டனர்.
மேலும்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
-
7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன
-
கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு