போலீஸ் செய்திகள் ...
கார் - டூவீலர் மோதல்
வேடசந்துார்: ஒட்டன்சத்திரம் தாலுகா புளியமரத்து கோட்டையை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா 46. சீத்தமரம்நால்ரோட்டில் இருந்து புளியமரத்துக்கோட்டை நோக்கி டூ வீலரில் சென்றார். சில்வார்பட்டி அய்யம்பட்டியை சேர்ந்த பாண்டித்துரை ஓட்டி வந்த கார் மோதியது. ராஜா தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். வேடசந்துார் தலைமை காவலர் சுப்பிரமணி விசாரிக்கிறார்.
புகையிலை விற்ற இருவர் கைது
நத்தம்: மாரியம்மன் கோவில் தெரு பகுதி பெட்டிகடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மேலமேட்டுபட்டியை சேர்ந்த சாகுல்ஹமீதை 67, போலீசார் கைது செய்த 8 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.இதுபோல் செந்துறை சொறிப்பாறைப்பட்டி பகுதி மளிகைகடையில் புகையிலை பொருட்களை விற்ற அதே பகுதி வீராச்சாமியை 35,கைது செய்த நத்தம் போலீசார் அவரிடமிருந்து 12 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
ஆம்னி வேனில் தீ
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை டி.கூடலுார் ரோட்டில் வான்ராயன்பட்டி பிரிவு அருகே ஸ்ரீ விநாயகா ஒர்க் ஷாப் உள்ளது. இங்கு உல்லியக்கோட்டை மாரியப்பன் ஆம்னி வேன் பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது தீப்பற்றி எரிந்தது. குஜிலியம்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.
அலைபேசி டவரில் திருட்டு
நத்தம்: கன்னிவாடி அருகே கரிசல்பட்டியை சேர்ந்தவர் மரியலேக்சன்ராஜா 32. திண்டுக்கல் மாவட்ட தனியார் அலைபேசி டவர் பராமரிக்கும் பணி காவலராக உள்ளார்.வாரம் ஒருமுறை பராமரிப்பு பணிக்கு செல்லும் இவர் நேற்று முன்தினம் நத்தம் எர்ரமநாயக்கன்பட்டி டவரில் பராமரிப்பு பணிக்காக சென்ற போது ,டவரில் இருந்த 23 பேட்டரிகள், 80 லிட்டர் டீசல் திருடு போயிருந்தது தெரிந்தது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் தற்கொலை
எரியோடு: பாகாநத்தம் துாங்கணம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன ஊழியர் பரமேஸ்வரன் 38. சென்னையில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்த இவர், 3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். விவசாய தோட்டத்தில் மோட்டார் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
வழிப்பறி நபர் கைது
வடமதுரை : மோர்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்கண்ணன் 28. அண்ணா நகர் ரவிக்குமாரிடம் கத்தியை காட்டி பணம் வழிப்பறி செய்தார். தினேஷ் கண்ணனை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.
டிராக்டர் மோதிகணவன், மனைவி காயம்
வேடசந்துார்: கோட்டாநத்தத்தை சேர்ந்தவர் சென்ட்ரிங் தொழிலாளி தங்கராஜ் 59. இவரது மனைவி மாணிக்காயி டி.கூடலுார் தனியார் பள்ளி சமையல் உதவியாளர். இவருடன் தங்கராஜ் டூவீலரில் டி.கூடலூர் சேர்வைக்காரன்பட்டி ரோட்டில் சென்றபோது முன்னாள் சென்ற டிராக்டரில் மோதியதில் கணவர்,மனைவி இருவரும் காயமடைந்தனர். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.
மேலும்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
-
7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன
-
கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு