அமாவாசை மகா பிரத்தியங்கிரா தேவி யாகம்

சாணார்பட்டி : -சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக மக்களின் நலன் வேண்டி நடந்த அமாவாசை மகா பிரத்யங்கரா தேவி யாக பூஜையை சபையின் நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். இதில் பா.ஜ.,முன்னாள் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இதையொட்டி பிரத்யங்கரா தேவி அம்மன், நரசிங்க பெருமாள் பூக்களால் அலங்கரிக்க யாககுண்டத்தில் மிளகாய் வத்தல் மூடை மூடையாக கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. பா.ஜ ., முன்னாள் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் உட்பட திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பங்கேற்றனர். கோயிலில் உள்ள கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் 100க்கு மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை அளிக்க கோபூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
-
7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன
-
கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு