மகிளா கோர்ட் நீதிபதி நியமனம்

திருப்பூர்:
தமிழகம் முழுவதும் பல்வேறு கோர்ட்களில் பணியாற்றும் மாவட்ட நீதிபதிகள், 52 பேர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஐகோர்ட் பதிவாளர் அல்லி இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். காலியாக இருந்த திருப்பூர் மகிளா கோர்ட் (விரைவு நீதிமன்றம்) நீதிபதி பணியிடத்துக்கு, ஈரோடு முதலாவது கூடுதல் மாவட்டநீதிபதியாக பணியாற்றும் கோகிலா நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதியாக பணியாற்றும் ஸ்ரீகுமார், ராணிப்பேட்டை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்பணியிடம் தற்போது காலியாக உள்ளது.

இடமாறுதல் செய்யப்படும் ஸ்ரீகுமாருக்குப் பதிலாக கோவை 5வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் சுந்தரம் இங்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement