437 சிலைகள் மீட்பு

சென்னை: “நான்கு ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், 437 சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன,” என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று காவல் துறை மானிய கோரிக்கை விவாதத்தில், வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ., - ஓ.எஸ்.மணியன், சிலைகள் மீட்பு தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த, அமைச்சர் சேகர்பாபு, “2021 மே முதல் நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி வரை, 236 உலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

''அதேபோல, 98 கற்சிலைகள், 11 மரச்சிலைகள், 72 கலைப்பொருட்கள் உட்பட, 437 சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள், காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.

Advertisement