தாயை கொன்ற வழக்கில் வாலிபர் தஷ்வந்த் விடுதலை

சென்னை:கொலை வழக்கில் ஜாமினில் வந்து தாயை கொலை செய்த வாலிபர் தஷ்வந்த், உரிய சாட்சியம் இல்லாததால் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை மாங்காடு பகுதியில் 2018ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நடந்தது. சிறுமியை கொன்ற கொடூரன், உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டான். இந்த சம்பவத்தில், அதே பகுதியை சேர்ந்த தஷ்வந்த் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அவனுக்கு கோர்ட்டில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை உயர்நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது.
ஆனால், உச்சநீதிமன்றத்தில் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த கொடூரன் தஷ்வந்த், செலவுக்கு பணம் தராததால் தன் தாயை கொலை செய்தான்.
தாயிடம் இருந்த 25 பவுன் நகையுடன் மும்பைக்கு தப்பிய அவனை, போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு கோர்ட்டில் நடந்தது. இதில், அவனது தந்தை பிறழ்சாட்சியாக மாறிவிட்டார். கொலையை நிரூபணம் செய்த போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் கோர்ட் தஷ்வந்த்தை விடுதலை செய்துள்ளது.





மேலும்
-
இந்திய பெண்கள் 'திரில்' வெற்றி * சரிந்தது தென் ஆப்ரிக்க அணி
-
பதிலடி தருமா சென்னை * இன்று பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை
-
'பிளே ஆப்' செல்லுமா பஞ்சாப் * பிரப்சிம்ரன் சிங் நம்பிக்கை
-
சரக்கு ஏற்றுமதியில் தமிழகம், தெலுங்கானா ஏற்றம்
-
ஹரியானாவில் ஐஸ்கிரீம் விற்கும் பாக்., முன்னாள் எம்.பி.,: குடும்பத்தினர் மீது நாடு கடத்தல் நடவடிக்கை
-
இங்கிலாந்து தொடரில் ஆயுஷ்