பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

5


நத்தம்: பட்டா மாறுதலுக்கு விவசாயியிடம் ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டம் பண்ணபட்டியை சேர்ந்த மகேஸ்வரன் என்ற விவசாயி, பட்டா மாறுதலுக்காக கடந்த சிலநாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார்.


இது தொடர்பாக சிலுவத்தூர் வி.ஏ.ஓ., முகமது ஜக்காரியாவை, மகேஸ்வரன் அணுகினார். பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என முகமது ஜகாரியா கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மகேஸ்வரன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.


அவர்களின் அறிவுரையின்படி மகேஸ்வரன் கொடுத்த ரூ.2,500 லஞ்சப்பணத்தை, முகமது ஜக்காரியாவை அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement