ரீல்ஸ் மோகத்தில் சேட்டை; கோவிலில் வீடியோ எடுத்தவர்கள் மீது போலீசில் புகார்!

2


திருநெல்வேலி: திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் வளாகத்தில் வீடியோ ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்கள் மீது கோவில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது. கோவில் வளாகத்தில் போட்டோ, வீடியோ எடுக்க தடை விதித்து உத்தரவிடப் பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் வளாகத்தில் வீடியோ எடுத்து ரீல்ஸ் ஆக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். வைரல் ஆன, இந்த வீடியோ கோவில் நிர்வாகம் கவனத்துக்கு சென்றது. "புனிதமிக்க இடமான கோவில் வளாகத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சைபர் கிரைம் போலீசில் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி புகார் அளித்தார்.


போலீஸ் எச்சரிக்கையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீடியோவை பதிவிட்டவர்கள் நீக்கினர். இது போன்ற அநாகரீகமான செயல்களை கோவிலில் செய்ய வேண்டாம். போட்டோ, வீடியோ எடுக்க ஏற்கனவே தடை அமலில் உள்ளது. இதை பக்தர்கள் பின்பற்ற கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த சம்பவம் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் அதிகரித்து உள்ளது என்பதை எடுத்துரைக்கிறது.


கோவில் வளாகத்தின் புனிதத்தை கெடுக்க கூடாது என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement