நைஜீரியாவில் பயங்கரம்; கண்ணிவெடியில் சிக்கிய டேங்கர் லாரி வெடித்ததில் 26 பேர் பலி!

அபுஜா: நைஜீரியாவில் கண்ணிவெடியில் சிக்கிய டேங்கர் லாரி வெடித்ததில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் அரசுக்கும், பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. எதிரிப்படைகளை பழி வாங்குவதற்காக, வெவ்வேறு இடங்களில் கண்ணி வெடிகள் பதிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு பதிக்கப்பட்டு இருந்த கண்ணி வெடியில் சிக்கிய டேங்கர் லாரி நேற்று வெடித்து சிதறியது. இந்த விபத்தில், அக்கம்பக்கத்தில் இருந்த ஆண்கள் 16 பேர், பெண்கள் 4 பேர் மற்றும் குழந்தைகள் 6 பேர் என மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நைஜீரியாவில் இது போன்ற விபத்து சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளில் இத்தகைய வெடி விபத்துகளில் 40 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும்
-
பிரீமியர் லீக் போட்டி: கோல்கட்டா அணி பேட்டிங்
-
பாலக்காடு நகராட்சியில் மோதல்: காங்., மார்க்சிஸ்ட் மீது பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு
-
வேலூர் மயானத்தில் உடலை எரிக்காமல் நாடகமாடிய ஊழியர்: உறவினர்கள் வாக்குவாதம்
-
பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம்: மோடி உறுதி
-
ரூ.2,500 லஞ்சம்: சிறப்பு எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் மூவர் சிக்கினர்!
-
கல்வியை நவீனப்படுத்தும் மத்திய அரசு : பிரதமர் மோடி பெருமிதம்