நிலக்கரி திருடிய டிரைவர் கைது

விருத்தாசலம்; டாடா ஏஸ் வாகனத்தில் பழுப்பு நிலக்கரி திருடி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். மார்க்கெட் கமிட்டி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த டி.என்.31-பி.ஜே.,0563 பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வாகனத்தை சோதனை செய்தனர். அதில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி 300 கிலோ இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த டிரைவர் பார்த்திபன்,36; என்பவரிடம் விசாரணை நடத்தியதில், பழுப்பு நிலக்கரியை திருடி வந்ததை ஒப்புக் கொண்டார். உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement