அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக் கொன்று இந்தியர் தற்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக்கொன்ற இந்தியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ம.பி., மாநிலம் கேஆர் பேட்டை தாலுகாவை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் என் கிக்கேரி(57). இவர் மைசூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஹோலோவோர்ல்ட் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவரது மனைவி ஸ்வேதா(44). இணை நிறுவனர். அமெரிக்காவில் இருந்த இவர்கள் 2017 ல் மைசூரு வந்து இந்த நிறுவனத்தை துவக்கினர். ஆனால், கோவிட் காரணமாக நிறுவனத்தை மூடிவிட்டு மீண்டும் அமெரிக்கா சென்றுவிட்டனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்திலும் பணியாற்றி உள்ளார். வாஷிங்டன்னில் நியூகாஸ்டில் நகரில் வசித்து வந்தஇவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த 24ம் தேதி வீட்டில், ஹர்ஷ்வர்தன், மனைவி மற்றும் 14 வயதான மகனை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் நடந்த போது, மற்றொரு மகன் வீட்டை விட்டு சென்றதால், அவர் உயிர் தப்பினார். சம்பவத்திற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



மேலும்
-
'எஸ்கலேட்டர், லிப்ட்' அனுமதி எளிதாக்க சட்டத்திருத்தம்
-
'மாஜி' எம்.எல்.ஏ., மாஸ்டர் பிளான்; பண்ருட்டியில் ஆதரவாளர்கள் 'குஷி'
-
'பொது புழக்கத்தில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும்'
-
காஷ்மீரில் ஹிந்துக்கள் படுகொலை; இது தேச அவமானம்; ஹிந்து மகா சபை
-
தனிப்பட்ட வெறுப்பை மக்களிடம் காட்டாமல் கனிவாக பேசுங்கள்; போலீசாருக்கு முதல்வர் அறிவுரை
-
என்.எல்.சி., தேர்தலில் தொ.மு.ச., ஓட்டு சரிந்தது ஏன்? முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு: நிர்வாகிகள் கலக்கம்