சப் - கோர்ட் நீதிபதிகள் ஐந்து பேர் இடமாற்றம்

கோவை, ; தமிழ்நாடு முழுவதும், சப்-கோர்ட் நீதிபதிகள், 117 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், கோவை மாவட்டத்தில் பணியாற்றும் ஐந்து நீதிபதிகள் அடங்குவர்.

கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட் நீதிபதி மோகன ரம்யா, கோவை எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட்டிற்கும், கோவை முதலாவது சார்பு நீதிபதி செந்தில்குமார், கோவை முதன்மை சார்பு கோர்ட்டிற்கும், கோவை முதன்மை சார்பு நீதிபதி கலைவாணி, கோவை முதலாவது கூடுதல் சார்பு கோர்ட்டிற்கும் மாற்றப்பட்டனர்.

கோவை எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட் நீதிபதி சரவணபாபு, ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராக மாற்றப்பட்டார். பொள்ளாச்சி சப்- கோர்ட் நீதிபதி மோகனவள்ளி, திருப்பூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலராக மாற்றப்பட்டார்.

கோவை போக்சோ சிறப்பு கோர்ட் நீதிபதி குலசேகரன், கடலுார் மகளிர் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார்.

Advertisement