தண்டனை கைதி சாவு



சேலம்:வாழப்பாடி, பேளூரை சேர்ந்தவர் மனோகரன், 62. கடந்த, 2015ல் நடந்த கொலை வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று, வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார். 2024 பிப்., 4ல், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.


அவருக்கு நேற்று மாலை, 5:30 மணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்ததில், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement