பழைய கார் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம்:
சேலம் மாவட்ட பழைய கார் வியாபாரிகள், ஆலோசகர்கள் நலச்சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் நல்லதம்பி தலைமை வகித்தார்.
புது போக்குவரத்து சட்டத்தால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்; ஆர்.சி., புத்தகத்தை கையில் வழங்க வேண்டும்; ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் காலி பணியிடங்களை உடனே நிரப்புதல்; கணினி மயமாக்கப்பட்ட பின்பும், 'ஸ்மார்ட் கார்டு'கள் வழங்க தாமதம் ஏற்படுவதை சரி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். செயலர் பாலசுப்ரமணி, பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement