கோகுலம் மருத்துவமனை நீர் மோர் பந்தல் திறப்பு



சேலம்:
கோடை காலத்தையொட்டி, சேலம், 5 ரோடு அருகே மெய்யனுார் பிரதான சாலையில் உள்ள கோகுலம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், அதன் நுழைவாயிலில் மக்களுக்கு இலவசமாக வழங்க நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. மருத்துவமனை மேலாண் இயக்குனர் அர்த்தனாரி தலைமை வகித்தார்.
சேலம் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தலைவர் ராஜகணபதி, வடக்கு ரோட்டரி சங்கத்தலைவர் சங்கர் ஆகியோர், பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு மோர் வழங்கினர். இதில் மருத்துவர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement