நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு அடுத்தடுத்து 5 கார்கள் மோதி விபத்து
ஓமலுார்:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அடுத்து குதிரைக்குத்தி பள்ளம் முன், தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில், வேகத்தை குறைக்க, போலீசார் சார்பில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த, 'ஹூண்டாய்' கார், இரும்பு தடுப்பு அருகே சென்று, திடீரென பிரேக் போட்டதால், அடுத்தடுத்து வந்த, 4 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதின. உடனே தீவட்டிப்பட்டி போலீசார், விசாரித்தபோது, அனைவரும் காயமின்றி தப்பியது தெரிந்தது. இச்சம்பவத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசாரால் விபத்து
தேசிய நெடுஞ்
சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும். பொதுவாக தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடைகள் அமைக்க கூடாது; சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் வைக்க கூடாது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில், போலீசார் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக, சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர். இதனால், பல இடங்களில் விபத்துகள் நடந்துள்ளன. நேற்று தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த விபத்துக்கும், போலீசார் வைத்திருந்த தடுப்புகள் தான் காரணம். தடுப்புகள் வைப்பதை தடுக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
குடிநீரில் சாக்கடை நீரால் நோய் தொற்று; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
-
விருது வழங்கும் விழா
-
அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
-
மாநகராட்சி அலுவலர்களுக்கு கோயிலில் கிடா விருந்து
-
இருளில் மூழ்கும் திண்டுக்கல் நகர் நுழைவுப்பகுதிகள்
-
கோடை காலத்தை பயன்படுத்தி நீர்நிலைகளை துார்வாரலாமே! மழையின் போது நீரை சேமிக்க வழி காணுங்க