உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பூர், ; திருப்பூர் மாவட்டத்தில், படித்த, வேலை கிடைக்காத இளைஞர்கள் விண்ணப்பிக்க, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளாகியும் வேலைகிடைக்காத படித்த இளைஞர்களுக்கு, தமிழக அரசு, மாதந்தோறும் உதவித்தொகை வழங்கிவருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாய்; பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு, 300 ரூபாய், மாற்றுத்திறனாளிகளுக்கு, 600 ரூபாய், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 ரூபாய், மாற்றுத்திறனாளிகளுக்கு, 750 ரூபாய், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய், மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவி தொகை வேண்டுவோர், https://employmentexchange.tn.gov.in என்கிற இணையதளம் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும்
-
மதுரையில் மழலையர் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி பலி உரிமையாளர் உட்பட இருவர் கைது
-
'பைப் லைனில்' எரிவாயு இணைப்பு; இதுவரை 1.50 லட்சம் வீடுகள் பதிவு
-
சீனா தந்த ஆயுதங்களை பாருங்க! எல்லையில் பாக்., போர் முழக்கம்
-
சென்னை மாணவ - மாணவியர் ராமேஸ்வரம் கடலில் நடனம்
-
காஷ்மீரில் மீண்டும் உயிர் பெற்றுள்ள தற்கொலை படையை முறியடிக்க, 'ஆன்டி பிதாயீன் ஸ்குவாடு'
-
பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி