மதகு அமைக்க எதிர்ப்பு
திருப்பூர்,; கீழ்பவானி பாசனத்தில், மங்களப்பட்டி, மொஞ்சனுார், அஞ்சூர் ஆகிய கடைமடை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பிரதான வாய்க்காலில் மதகு அமைக்க கூடாது என, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்த விவசாயிகள் கூறியதாவது:
தற்போது தண்ணீர் குறைந்தளவே கிடைத்து வருகிறது. இந்நிலையில், பிரதான கால்வாயில், மைல் 95/2, மறவபாளையத்தில், 1.5 கோடி ரூபாயில் புதிய மதகு அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி பிரதான கால்வாயில், காட்டுவாரி, முதலை மடை இடத்தில் அவசர கால நீர் வெளியேறும் மதகுகள் உள்ளன. மைல் 95 முதல் 124 வரை, பிரதான கால்வாயில் இதுவரை உடைப்பு ஏற்பட்டதே இல்லை. எனவே, புதிய மதகு அமைக்கவேண்டிய அவசியமில்லை.
கோபியில் 37 மைலில் உள்ள அவசரகால மதகை ஆண்டுதோறும் திறந்துவிடப்பட்டு, சட்ட விரோதமாக அங்குள்ள குளங்களை நிரப்புகின்றனர். வெள்ளோடு குளத்தையும் இதேபோல் வாய்க்காலை உடைத்து நிரப்பிவந்தனர். தற்போது சுவர் கட்டப்பட்டு, தடுக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது திட்டமிட்டுள்ள மைல் 95/2 ல், மதகு கட்டக்கூடாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
'பைப் லைனில்' எரிவாயு இணைப்பு; இதுவரை 1.50 லட்சம் வீடுகள் பதிவு
-
சீனா தந்த ஆயுதங்களை பாருங்க! எல்லையில் பாக்., போர் முழக்கம்
-
சென்னை மாணவ - மாணவியர் ராமேஸ்வரம் கடலில் நடனம்
-
காஷ்மீரில் மீண்டும் உயிர் பெற்றுள்ள தற்கொலை படையை முறியடிக்க, 'ஆன்டி பிதாயீன் ஸ்குவாடு'
-
பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
-
மேலே பாம்பு,கீழே நரிகள்; குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச்சுவர் தடைகளை தாண்டி சாதித்ததாக முதல்வர் பெருமிதம்