வழக்கறிஞர்கள் 2வது நாள் ஆர்பாட்டம்

தாம்பரம், தாம்பரம் தாலுகாவில் தாம்பரம், சிட்லப்பாக்கம், மேடவாக்கம், மாடம்பாக்கம் என, நான்கு உள்வட்டங்கள் உள்ளன.
இதில், தாம்பரம், சிட்லப்பாக்கம் உள்வட்டங்களில் உள்ள அனைத்து வழக்குகளும், தாம்பரம் நீதிமன்றத்தில் நடக்கின்றன.
மேடவாக்கம் உள்வட்டத்தில் உள்ள எட்டு கிராமங்களில், வேங்கைவாசல் கிராமத்திற்கான வழக்கு மட்டும், தாம்பரத்தில் நடக்கிறது.
மற்ற ஏழு கிராமங்களில் உள்ள வழக்குகள், ஆலந்துார் நீதிமன்றத்தில் நடக்கின்றன.
இதேபோல், மாடம்பாக்கம் உள்வட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களின் வழக்குகள், ஆலந்துார் நீதிமன்றத்தில் நடக்கின்றன.
இதை சரிசெய்து, மேடவாக்கம், ஜலடியன் பேட்டை, பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம், கோவிலம்பாக்கம், சித்தாலப்பாக்கம், நன்மங்கலம், கோவிலாஞ்சேரி, மதுரப்பாக்கம், மூலச்சேரி ஆகிய 10 கிராமங்களின் வழக்குகளை, தாம்பரம் நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என, வழக்கறிஞர்கள், மூன்று நாள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரண்டாம் நாளாக கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது.
படவிளக்கம்:
தாம்பரம் நீதிமன்றத்துடன் 10 கிராமங்களின் வழக்குகளை இணைத்து விசாரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தினமலர் நாளிதழில் வெளியான செய்தியின் நகலுடன் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.