தட்டச்சு நிலையத்தில் தீ விபத்து

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் மின் கசிவால் தட்டச்சு பயிற்சி நிலையம் தீயில் எரிந்து சேதமானது.

விக்கிரவாண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் தெருவில் சேகர், 69; சிறிய இடத்தில் ஆஸ்பெஸ்டால் சீட் பொருத்திய அறையில் தங்கி கொண்டு, தட்டச்சு பயிற்சி நிலையம் நடத்தி வந்தார்.

நேற்று மாலை 4:00 மணிக்கு தட்டச்சு பயிற்சி நிலையம் திடீரென தீப்பற்றி எரிந்தது. காகிதம், கார்பன் ஷீட்கள் எரிந்து புகை மண்டலம் உருவானது. சிலிண்டர்கள் இருந்ததால், தீ அணைக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபடவில்லை.

விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன், தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான வீரர்கள், தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Advertisement