அமர்ஜோதி கார்டனில் ரோடு பொதுமக்கள் நிம்மதி

திருப்பூர் : அமர்ஜோதி கார்டன், பொன் நகர் பகுதியில் புதிய ரோடு அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

திருப்பூர் 46வது வார்டு பகுதியில் அமர்ஜோதி கார்டன் - பொன் நகர் உள்ளது. காங்கயம் ரோட்டையும், காசிபாளையம் பாலம் செல்லும் பகுதியையும் இணைக்கும் வகையில் இப்பகுதி உள்ளது. குடியிருப்பு பகுதிகளும், நுாற்றுக்கணக்கான வீடுகளும் இப்பகுதியில் உள்ளது.

இங்குள்ள பிரதான ரோடு அமைக்கப்பட்டு பல ஆண்டு காலமாகிறது. இதனை முழுமையாக புதிய ரோடாக மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரி வந்தனர். அவ்வகையில், புதியதாக போடும் பணி துவங்கியுள்ளது.

முன்னதாக பழைய ரோடு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின், புதிய ரோடு அமைக்கும் பணி துவங்கும் என மாநகராட்சியினர் தெரிவித்தனர்.

Advertisement