கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20ல் வேலை நிறுத்தம்

கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில், மே 20ம் தேதி, அகில இந்திய அளவில், பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தை முன்னிட்டு, பிரசாரம் மற்றும் இயக்க பணிகளுக்கான தயாரிப்பு மாநாடு, கோவை காட்டூரில் உள்ள, ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நடந்தது.

மாநாட்டுக்கு தலைமை வகித்த, ஹெச்.எம்.எஸ்., சங்க தலைவர் ராஜாமணி, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:

லோக்சபாவில் தொழிலாளர் சட்டம் குறித்து, எந்த விதமான விவாதங்களும் நடைபெறவில்லை. புதிய தொழிலாளர் சட்டங்களை கைவிட வேண்டும்.

தொழிலாளர் சட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் பற்றி, இந்திய தொழிலாளர் மாநாட்டில், அனைத்து தரப்பினரும் விவாதித்து ஏற்றுக்கொள்வதை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

இந்த மாநாட்டில், ஐ.என்.டி.யு.சி.,- ஏ.ஐ.டி.யூ.சி.,- ெஹ.எம்.எஸ்., -சி.ஐ.டி.யு.,- எல்.பி.எப்., உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement