குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


கரூர்:
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சமூக பணியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சமூக பணியாளர், உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் ஆகிய பணியிடங்கள், ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

இதில், சமூக பணியாளர் பணிக்கு, சமூகவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில், இளங்கலை பட்டம் பெற்றும், கணினி இயக்கவும்

தெரிந்திருக்க வேண்டும். இதற்கு, 18,536 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
உதவியாளர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் தமிழ், ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கணினி இயக்க தெரிய வேண்டும். இதற்கு, 13,240 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண், 55, முதல் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம், கரூர்- என்ற முகவரிக்கு, 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04324 -296056 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement