குறள் ஒப்புவித்தல் போட்டி

விருதுநகர்; கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: ஏப். 29 முதல் மே 5 வரைபாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டுஏப்.29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படுகிறது.

பொதுமக்களுக்கான 100 திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி (பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களை தவிர) ராஜபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி ஆர்.எஸ்.ஆர். மெட்ரிக் பள்ளி, விருதுநகர் ஹாஜிபி மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00மணி வரை நடக்கிறது.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு திருக்குறள் பற்றாளர் என்ற சான்றிதழும், திருவள்ளுவர் சிலையும் நினைவு பரிசாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்96988 10699 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.

Advertisement