கஞ்சா கடத்தியவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

மூணாறு; மூன்று கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், உத்தமபாளையத்தைச் சேர்ந்த குமரேசனுக்கு 35, மூன்று ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.அவர் கடந்த 2017 ஏப்.17ல் தமிழகத்தில் இருந்து 3 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தார். இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே கல்லார் பகுதியில் குமரேசனை கஞ்சாவுடன் உடும்பன்சோலை எக்சைஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜி தலைமையில் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு தொடுபுழா போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிகுமார், குமரேசனுக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement